Idhayam Matrimony

சிராஜுக்கு புரூக் புகழாரம்

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
4-Ram-53

Source: provided

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-2 என்ற கணக்கில் தொடர் சமமானது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை கூட மிஸ் செய்யாமல் அனைத்து போட்டியிலும் சிராஜ் விளையாடி அசத்தியுள்ளார். 5 போட்டிகளில் விளையாடி 185.3 ஓவர்கள் (1113 பந்துகள்) வீசி 26 மெய்டனுடன் 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட போட்டிகள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சிராஜ் உள்ளார். இந்நிலையில் சிராஜை நான் பெருமளவில் மதிக்கிறேன் என இங்கிலாந்து அணியின் பேட்டர் ஹாரி புரூக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- சிராஜை நான் பெருமளவில் மதிக்கிறேன். 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி, ஒவ்வொரு முறையும் 135kmph+ வேகத்தில் பந்து வீசினார். அவர் சிறந்தவர். இந்த வெற்றி அவருக்கு உரித்தானது. என ஹாரி ப்ரூக் கூறினார்.

இந்திய அணி முன்னேற்றம்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது.

இந்த போட்டி முடிவடைந்ததையடுத்து 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து 66.67 சதவீத புள்ளிகளுடன் இலங்கை 2-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா ஒரு இடம் உயர்ந்து 46.67 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக தோல்வி கண்ட இங்கிலாந்து ஒரு இடம் சரிந்து 43.33 சதவீத புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்காளதேசம் 16.67 சதவீத புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. 6 முதல் 9 இடங்கள் வரை முறையே வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நடப்பு சாம்பியன் தென் ஆப்பிரிக்கா (சதவீதம் ஏதும் இன்றி) உள்ளன.

வெளிநாட்டு மண்ணில் சாதனை

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய தொடர்களின் கடைசிப் போட்டியில் இதுவரை வென்றதில்லை. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் மூலம், வெளிநாட்டு மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்று தனித்துவமான சாதனை படைத்துள்ளது.

இந்திய ஜோடி சாம்பியன்

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லெக்சிங்டன் நகரில் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ராம்குமார், அனிருத் ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் யூ ஹிசியூ ஹுசு, ரே ஹோ ஹுவாங் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து