Idhayam Matrimony

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Thiruchendur-Temple

Source: provided

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து கொடிப்பட்டம் வெள்ளிப்பல்லக்கில் வைக்கப்பட்டு 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டது. பஞ்சவாத்தியங்கள் முழங்க, வேத பாராயணங்கள் பாட, வாண வேடிக்கையுடன் 5.17 மணிக்கு கோயில் பிரகாரத்தில் உள்ள செப்புக் கொடிமரத்தில் காப்புகட்டிய சிவகுகநாதன் பட்டர் கொடியேற்றினார்.

பின்னர், கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 6.40 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் வேதகபாராயணமும், கோயில் ஓதுவார்கள் திருமுறைப் பாராயணமும் பாடினர். இதில், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள், கோவில் இணை ஆணையர் எஸ்.ஞானசேகரன், திருக்கோவில் பணியாளர்கள், திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் செங்குலி ரமேஷ், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ரா.அருள்முருகன், இணை ஆணையர் எஸ்.ஞானசேகரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து