முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் சண்டைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டிருக்கிறோம்: தேர்தல் ஆணையம் அதிருப்தி

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

புது தில்லி, அரசியல் சண்டைகளுக்கு நடுவே நாங்கள் மாட்டிக் கொண்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போராட்டத்திற்கு இடையில் சிக்கியிருக்கிறோம், அவர்கள் வெற்றி பெற்றால் மின்னணு வாக்கு இயந்திரம் நல்லது, அதுவே அவர்கள் தோற்றுவிட்டால் மின்னணு வாக்கு இயந்திரம் மோசமானது என்று கூறுவார்கள் எனவும் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. பீகாரில், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த முறைக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்கும் முன்பு, ஏன் காட்சிப்படுத்தவோ அல்லது வலைத்தளத்திலோ வைக்க முடியாது? பாதிக்கப்பட்டவர்கள் 30 நாள்களுக்குள் அது குறித்து கருத்துகளை தெரிவிக்கலாமே என்று தேர்தல் ஆணையத்திடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியிருக்கிறது. 

இதற்கு பதிலளித்து, தேர்தல் ஆணையம் தரப்பில் சில வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அதில், தற்போதைய பிரச்னை, கடும் அரசியல் விரோத போக்கால் ஏற்பட்டிருக்கிறது. இதில் எந்த சர்ச்சைக்குரிய முடிவுகளும் இல்லை. எங்களுக்கும் சில முடிவுகளை எடுக்கும் அதிகாரங்கள் உள்ளன. அரசியல் சண்டைகளுக்கு நடுவே மாட்டிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் வென்றால், தேர்தல் நடைமுறை நல்லது என்றும், தோற்றால் மோசமானது என்றும் கூறுவார்கள் எனவும் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

இதைக் கேட்ட சுப்ரீம் கோர்ட், இறந்த, இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை காட்சிப் பலகை அல்லது வலைத்தளத்தில் வெளியிடுவது. கவனக்குறைவான பிழைகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கும். இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது முகவரி மாறியவர்கள் பற்றிய தகவல்கள் பகிரப்படும் வலைத்தளங்கள், இடம், விவரங்கள் குறித்து பொது அறிவிப்பை வெளியிடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து