எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கெய்ன்ஸ்: மேக்ஸ்வெல்லின் அதிரடியால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
ஆஸ்திரேலியாவின் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இளம் அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரேவிஸ் 26 பந் துகளில் 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 53 ரன்கள் விளாசினார். ஆரோன் ஹார்டி வீசிய 10-வது ஓவரில் மிட்விக்கெட், லாங்க் ஆன், லாங்க் ஆஃப், டீப் கவர் ஆகிய திசைகளில் சிக்ஸர் விளாசி மிரட்டினார் டெவால்ட் பிரேவிஸ். இந்த ஓவரில் மட்டும் 27 ரன்கள் விளாசப்பட்டிருந்தன.
லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 15 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 24 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்களும், ராஸி வான் டெர் டஸ்ஸன் 26 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களும் சேர்த்தனர். தொடக்க வீரர்களான கேப்டன் எய்டன் மார்க் ரம் 1, ரியான் ரிக்கெல்டன் 13 ரன்களில் வெளியேறினர்.
ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 108 ரன்கள் குவித்து வலுவாக இருந்தது. இதன் பின்னர் டெவால்ட் பிரேவிஸ் ஆட்டமிழந்ததை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியின் ரன்குவிப்பை ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் வெகுவாக குறைத்தனர். கடைசி 9 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணியால் 64 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 4 விக்கெட்களையும் பறிகொடுத்திருந்தது.
173 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிளென் மேக்ஸ்வெல் 36 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். கேப்டனும், தொடக்க வீரருமான மிட்செல் மார்ஷ் 37 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்தார்.
டிராவிஸ் ஹெட் 19, ஜோஷ் இங்லிஷ் 0, கேமரூன் கிரீன் 9, டிம் டேவிட் 17, ஆரோன் ஹார்டி 1, பென் டுவார்ஷுயிஸ் 1, நேதன் எலிஸ் 0 ரன்களில் நடையை கட்டினர். லுங்கி நிகிடி வீசிய கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவையாக இருந்தன. முதல் பந்தில் 2 ரன்கள் சேர்த்த கிளென் மேக்ஸ்வெல் 2-வது மற்றும் 5-வது பந்துகளில் பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் போட்டியில் அந்த அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஆட்டத்தில் 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.
ஆட்ட நாயகனாக கிளென் மேக்ஸ்வெல்லும், தொடர் நாயகனாக டிம் டேவிட்டும் தேர்வானார்கள். டி20 தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் வரும் 19-ம் தேதி கசாலிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
திருமாவளவனுக்கு முதல்வர் வாழ்த்து
17 Aug 2025சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேற்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
தமிழக வளர்ச்சியில் பொறாமை கொண்டு இழிவான அரசியல் கவர்னர் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கு
17 Aug 2025தருமபுரி: தமிழக வளர்ச்சியில் பொறாமை கொண்டு இழிவான அரசியல் செய்கிறார் கவர்னர் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
த.வெ.க. 2-வது மாநில மாநாடு: பாரபத்தியில் குடிநீர் மேலாண்மைக்குழு அமைப்பு
17 Aug 2025மதுரை: தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டையொட்டி மதுரை பாரபத்தியில் குடிநீர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
ஜம்மு - காஷ்மீர் மக்களுடன் துணை நிற்கிறோம்: அமித்ஷா
17 Aug 2025புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஜோத் காட்டியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
-
கொளத்தூரில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? வதந்தியை பரப்பாதீர்கள் அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
17 Aug 2025சென்னை: கொளத்தூரில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? வதந்தியை பரப்பாதீர்கள் என்று அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
-
சிலேசியா டைமண்ட் லீக் தடகள போட்டி கிஷானே தாம்சன் தங்கம் வென்றார்
17 Aug 2025பேகா ஓபன் ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீராங்கனை அனாஹத் சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி
-
பிரபல யூடியூபர் வீட்டில் துப்பாக்கி சூடு
17 Aug 2025சண்டிகர்: அரியானாவின் குருகிராமை சேர்ந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் வீட்டில் நேற்று அதிகாலை துப்பாக்கி சூடு நடைபெற்றது.
-
மாற்று வீரருக்கு அனுமதி அளித்த இந்திய கிரிக்கெட் போர்டு
17 Aug 2025ஆமதாபாத்: உள்ளூர் போட்டிகளில் கடும் காயம் அடைந்தவருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்க பி.சி.சி.ஐ., அனுமதித்துள்ளது.
-
அமித்ஷா எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை அமைச்சர் ரகுபதி பேட்டி
17 Aug 2025சென்னை: அமித்ஷா எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
ஆசிய கோப்பை தொடர் ஹர்பஜன் சிங் அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லை
17 Aug 2025மும்பை: ஆசிய கோப்பை தொடரில் ஹர்பஜன் சிங் அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லை.
-
சீமை கருவேல மரங்கள் அகற்றும் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் நீதபதிகள் எச்சரிக்கை
17 Aug 2025சென்னை: சீமை கருவேல மரங்கள் அகற்றும் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று ஐகோர்ட் நீதபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
தீபாவளி பண்டிகை எதிரொலி: 10 நிமிடங்களிலேயே முடிந்த ரயில் டிக்கெட் முன்பதிவு
17 Aug 2025சென்னை: தீபாவாளி நாளான அக்டோபர் 26-ம் தேதிக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே முடிந்தது.
-
நாட்டின் நிலை எமர்ஜென்சியை விட மிகவும் மோசமாக உள்ளது லல்லு பிரசாத் யாதவ் குற்றச்சாட்டு
17 Aug 2025பாட்னா: நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம் என்று லல்லு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பும்ரா விளையாட வாய்ப்பு
17 Aug 2025மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்திய அணிக்கு தன்னால் மீண்டும் தேர்வாக முடியும் - புஜாரா நம்பிக்கை
17 Aug 2025புதுடெல்லி: இந்திய அணிக்கு தன்னால் மீண்டும் தேர்வாக முடியும் என்று கிரிக்கெட் வீரர் புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
டெவால்ட் பிரேவிஸ் விவிகாரம் அஸ்வின் விளக்கம்
17 Aug 2025சென்னை: டெவால்ட் பிரேவிஸ் விவிகாரம் குறித்து அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.
-
டி-20 தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த மேக்ஸ்வெல்
17 Aug 2025கெய்ன்ஸ்: மேக்ஸ்வெல்லின் அதிரடியால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அ
-
ஆசியக் கோப்பை தொடர்: பாக்., அணியில் பாபர் அசாம், ரிஸ்வானுக்கு இடமில்லை
17 Aug 2025லாகூர்: ஆசியக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அணியில் அசாம், ரிஸ்வானுக்கு இடமில்லை என்று பாக்.கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
-
பேச்சுவார்த்தை ரத்து: இந்திய பயணத்தை தவிர்த்த அமெரிக்க குழு - அமலுக்கு வரும் 50 சதவீத வரி?
18 Aug 2025அமெரிக்கா : பேசசுவார்த்தை ரத்தானதை தொடர்ந்து இந்திய பயணத்தை அமெரிக்க குழு ரத்து செய்து 50 சதவீத வரியை அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.
-
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ஆடி களப பூஜை நிறைவு
17 Aug 2025குமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை கடந்த 4-ந்தேதி தொடங்கியது.
-
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் கார்லஸ் அல்காரஸ்
17 Aug 2025சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-08-2025.
18 Aug 2025 -
ஆக 29 ல் வெளியாகும் சமுத்திரக்கனியின் வீரவணக்கம்
18 Aug 2025பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அனில் வி.நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கி சமுத்திரக்கனி மற்றும் பரத் இணைந்து நடித்திருக்கும் படம் வீரவணக்கம்.
-
நிவின்பாலி - நயன்தாரா இணைந்து நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ்
18 Aug 2025நிவின்பாலி – நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும் இந்த படத்தை, அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப்குமார் எழுதி இயக்கியுள்ளனர்.
-
நடவடிக்கை எடுக்கப்படும்: எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை
18 Aug 2025டெல்லி : பாராளுமன்றத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி எம்.பி.களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.