முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளத்தூரில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? வதந்தியை பரப்பாதீர்கள் அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Elections 2024-04-01

Source: provided

சென்னை: கொளத்தூரில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? வதந்தியை பரப்பாதீர்கள் என்று அரசு  தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

கொளத்தூர் தொகுதியில் 84-ம் வாக்குச்சாவடியில் வீட்டு எண் 11-ல் 30 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ரபியுல்லா என்ற ஒரே பெயரில் 3 வாக்காளர்கள் இருக்கின்றனர் என பா.ஜ.க. எம்.பி. பேசியதை தமிழக பா.ஜ.க. சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது.

இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் படத்துடன் விளக்கம் அளித்து இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொளத்தூர் தொகுதி ஆண்டாள் அவென்யூவில் உள்ள 11-ம் எண் என்பது தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு பகுதி. வாக்குச்சாவடி எண் 84 விவரங்களின்படி, வரிசை எண் 40 முதல் 75 வரையில் உள்ள வாக்காளர்கள் 11 எண் கொண்ட ஏ.எஸ்.வீனஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இதில் ரபியுல்லா என்பவரின் பெயர் வரிசை எண் 50-லும், 52-ல் கணவர் என்கிற இடத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும் வரிசை எண் 348, 352 ஆகியவற்றில் தந்தை என்ற இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. 

ஆனால் காணொளியில் குறிப்பிட்டது போல ரபியுல்லா என்ற பெயரில் 3 வாக்காளர்கள் இல்லை. வாக்குச்சாவடி எண் 157-ல் (வேறு பகுதி) ரபியுல்லா பெயர் தந்தை, கணவர் என்ற இடங்களில் வருகிறது. 11 எண் கொண்ட குடியிருப்பில் முஸ்லிம்கள் மட்டும் வசிப்பது போன்ற தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். அங்கு அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். வதந்தியை பரப்பாதீர்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து