எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மாணவர்களின் பன்முகத்திறனை ஊக்குவிக்கும் கலைப்பட்டறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.
சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களிடையே வாழ்வியல் திறன்களோடு அவர்களின் பன்முகத்திறன் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில், கலைத்திறன்கள் வாயிலாக மாணவர்களின் சிந்தனைகளை செம்மையாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்துவதற்காக கலைப்பட்டறையை தொடங்கி வைத்தார். இதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் போதைப் பொருட்கள் இல்லாத ஒரு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. துணை முதலமைச்சரின் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கடந்த வாரம் திருச்சி மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்து உறுதிமொழியை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு கோடியே 13 லட்சம் பொதுமக்களை சென்றடையும் அளவிற்கு ஒரு லட்சத்து அறுபத்தாறாயிரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் 13,903 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் போதை எதிர்ப்பு மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மன்றங்களில் உள்ள மாணவர்கள் பல்வேறு நிகழ்வுகளிலும் ஓவியப் போட்டிகள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு சார்ந்த புத்தாக்க பயிற்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
மாணவர்களின் வாழ்வியல் திறன்கள் சார்ந்த பயிற்சியும், போதைப் பொருள் சார்ந்த பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நலக்கேடு மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு சார்ந்து மருத்துவ வல்லுநர்களாலும் சிறப்பு கருத்தரங்கங்களில் பங்கேற்றும், அதனடிப்படையில் ஓவியத்தின் வாயிலாகவும் சுவரொட்டிகளின் மூலம் போதை தடுப்பு சார்ந்த சுய விழிப்புணர்வு மற்றும் மாணவர்களின் உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும் பயிற்சி அளிக்கப்பட்டு மாணவர்களிடையே போதை எதிர்ப்பு மற்றும் வலுவூட்டும் பட்டறையாகவும் இக்கலை பட்டறை திட்டமிட்டு செயல்படுத்தப் பட்டுள்ளது.
இக்கலைப் பட்டறைக்கு அடிப்படையாக 19.08.2025 அன்று போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கத் தேவையான வாழ்வியல் திறன்கள் குறித்த அறிமுக அமர்வில் 50 ஆசிரியர்களும் 90 மாணவர்களுமாக மொத்தம் 140 நபர்கள் பங்கேற்றனர். போதைப்பொருள் எதிர்ப்பு மன்றச் செயல்பாடுகள் குறித்த பயிற்சியினை கருத்தாளர்களாக மருத்துவர் வெங்கடேஷ் மதன்குமார், டி.கார்த்திகேயன், சரவணகுமார் ஆகியோரால் பயிற்சி அளிக்கப்பட்டு, ஓவிய வல்லுநர்களின் உதவியுடன், மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஓவியங்கள் மற்றும் சுவரொட்டிகளை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இக்கலைப்பட்டறையினை அடிப்படையாகக் கொண்டு அனைத்து பள்ளிகளிலுள்ள போதை எதிர்ப்பு மன்ற ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மாவட்டத்திலுள்ள முதன்மை பயிற்றுநர்களுக்கும் பயிற்சி வழங்கி மாணவர்களுக்கு கலைப்பட்டறை செயல்பாடுகள் செயல்படுத்தப்படும். வாழ்வியல் திறன் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசால் ரூபாய் 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாணவச் செல்வங்கள் இந்த வயதில் இருந்து மற்றவர் களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வினை எடுத்துச் சொல்லும் ஒரு நல்ல உள்ளங்களாக இருக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு செல்கின்ற வகையில் பத்திரிகை ஊடகத்துறையினரும் ஈடுபடும்போது இது மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தி போதை பொருட்கள் இல்லாத ஒரு தமிழகத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதை நிறைவேற்றிக் காட்டுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-08-2025.
20 Aug 2025 -
தங்கம் விலை குறைப்பு
20 Aug 2025சென்னை, இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
தனது திருமண நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை
20 Aug 2025சென்னை : எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என தனது 50-வது திருமண நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை கூற
-
ஒண்டிவீரன் நினைவுநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
20 Aug 2025சென்னை : ஒண்டிவீரன் நினைவுநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியானது- கவாஸ்கர்
20 Aug 2025புதுடெல்லி, கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியானது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
இன்று த.வெ.க. மாநில மாநாடு: மதுரையில் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
20 Aug 2025மதுரை : தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுவதால் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
-
இடைத்தரகரை அணுக வேண்டாம்: பக்தர்களுக்கு திருப்பதி கோவில் தேவஸ்தானம் வேண்டுகோள்
20 Aug 2025திருமலை : இடைத்தரகரை அணுக வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
தேசிய சீனியர் தடகள போட்டி: 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உ.பி. வீரர் அபிஷேக் முதலிடம்
20 Aug 2025சென்னை, தேசிய சீனியர் தடகள 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உ.பி. வீரர் அபிஷேக் முதலிடம் பெற்றார்.
-
ஜார்க்கண்டில் பயன்பாட்டில் இல்லாத ரேஷன் அட்டைதாரர் பெயர்கள் நீக்கம்
20 Aug 2025ராஞ்சி, ஜார்க்கண்டில் பயன்பாட்டில் இல்லாத ரேஷன் அட்டைதாரர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது.
-
இயல்பு நிலைக்கு திரும்புகிறது மும்பை
20 Aug 2025மும்பை, இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது மும்பை.
-
துணை கேப்டன் பதவியில் இருந்து படேல் நீக்கம்; விளக்கம் கோரும் முன்னாள் வீரர்
20 Aug 2025மும்பை, துணை கேப்டன் பதவியில் இருந்து அக்சர் படேல் நீக்கத்திற்கு விளக்கம் வேண்டும்- முன்னாள் வீரர் காட்டமாக தெரிவித்தனர்.
-
பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை நீக்கும் மசோதா மக்களவையில் தாக்கல்
20 Aug 2025புதுடெல்லி : பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை நீக்கும் மசோதாக்களை மக்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார்.
-
பா.ஜ.க., என்.ஆர்.காங். மட்டுமின்றி எதிரிகள் பலர் உள்ளனர்: நாராயணசாமி பரபரப்பு பேச்சு
20 Aug 2025புதுச்சேரி, பா.ஜ.க., என்.ஆர்.காங். மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளதாக நாராயணசாமி பேசினார்.
-
மதுரை த.வெ.க. மாநாடு: 100 அடி கொடிக்கம்பம் கீழே விழுந்ததால் திடீர் பரபரப்பு
20 Aug 2025மதுரை : மதுரை த.வெ.க. மாநாட்டில் நடப்பட முயன்ற 100 அடி கொடிக்கம்பம் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அரசமைப்பு சட்டத்திருத்த மசோதா: அமித் ஷாவுக்கு முதல்வர் கண்டனம்
20 Aug 2025சென்னை, அரசமைப்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்த அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
-
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது ட்ரம்ப் வரி விதிப்பு ஏன்..? அமெரிக்கா புது விளக்கம்
20 Aug 2025நியூயார்க் : உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது ட்ரம்ப் வரி விதிப்பு குறித்து அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
-
பட்டியல் சமூகத்துக்கான இடஒதுக்கீடு: கர்நாடக அமைச்சரவை முக்கிய முடிவு
20 Aug 2025பெங்களூரு : பட்டியல் சமூகத்துக்கான இடஒதுக்கீட்டை பிரிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
ஆசிய கோப்பை தொடர்: ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுப்பு: கொந்தளித்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த்
20 Aug 2025டெல்லி, ஆசிய கோப்பையில் ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக்: மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியை வீழ்த்திய ட்ரெண்ட் ராக்கெட்ஸ்
20 Aug 2025லண்டன், இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் (100 பந்துகள் கிரிக்கெட்) தொடர் நடைபெற்று வருகிறது.
-
பஞ்சுக்கு இறக்குமதி வரி விலக்கு: தமிழக ஜவுளி தொழில் துறை வரவேற்பு
20 Aug 2025கோவை : பஞ்சுக்கு 11 சதவீதம் இறக்குமதி வரி விலக்கு அளித்ததை தொடர்ந்து தமிழக ஜவுளி தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.
-
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
20 Aug 2025வாஷிங்டன் : போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் உக்ரைன் அதிபர்.
-
மக்கள் குறைதீர் முகாமில் டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் : ராஜ்கோட்டை சேர்ந்தவர் கைது
20 Aug 2025புதுடெல்லி : டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்கவந்த நபர் ஒருவர் அவரை தாக்கியதால்
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம் வென்றார் மணிகா
20 Aug 2025ஜெய்ப்பூர் : ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டத்தை மணிகா விஸ்வகர்மா வென்றுள்ளார்.
-
ஷ்ரேயாஸ் ஐய்யரை எடுக்காதது நியாயமற்ற முடிவு- அஸ்வின்
20 Aug 2025டெல்லி, ஷ்ரேயாஸ் ஐய்யரை எடுக்காதது நியாயமற்ற முடிவு என்று அஸ்வின் கூறினார்.
-
மழை பாதிப்பால் மின்சாரம் துண்டிப்பு: இருளில் மூழ்கியது ஊட்டி
20 Aug 2025ஊட்டி : மழை பாதிப்பால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஊட்டி நகர் முழுவதும் இருளில் மூழ்கியது