முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டன் விஜயகாந்த் கனவுத்திட்டம்: தி.மு.க. நிறைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - பிரேமலதா

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Premalatha 2025-08-20

மயிலாடுதுறை, தி.மு.க. நிறைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை இது கேப்டன் விஜயகாந்த்தின் கனவுத்திட்டம் பிரேமலதா தகவல்.

மயிலாடுதுறையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* வீடு தேடி ரேஷன் பொருள் வரும் என்று முதலில் சொன்ன தலைவர் கேப்டன். 2005 கட்சி ஆரம்பித்தபோது சொல்லி, 2006 முதல் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டம். இவ்வளவு வருடம் கழித்து தமிழ்நாட்டில் தொடங்கி இருக்கிறார்கள். அதுவும் சின்ன அளவிலேயே தொடங்கி இருக்கிறார்கள்.

70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் லாரியில் வைத்து பொருள் கொடுக்கிறார்கள். இது எந்த அளவுக்கு ரீச் ஆகுது என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இது கேப்டனின் கனவு திட்டம். இந்த திட்டம் கேப்டனுக்கு கிடைத்த பெருமை. இந்த திட்டம் மேலும் விரிவாகி எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.

* தி.மு.க. இன்னும் நிறைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது உண்மை. அதில் பொய்யோ இல்லை என்று சொல்லமுடியாது. அவர்கள் கொடுத்த நிறைய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றவில்லை. சட்டம், ஒழுங்கு இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது. நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதனால் தான் நிறைகளும் குறைகளும் இணைந்த ஆட்சி என்று சொல்லி இருக்கிறேன்.

* கட்சி மாறுவது ஒன்றும் தமிழ்நாட்டில் புதுசு கிடையாது. எத்தனையோ ஆண்டுகளாக நடக்கின்ற விஷயம் தான். அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க. போவது. தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க. போவது, மற்ற கட்சிகளுக்கு போவது.

ஏன் தே.மு.தி.க.வில் கேப்டன் பார்த்து வளர்த்த அந்த எம்.எல்.ஏ.க்கள் அவர் முதுகில் குத்திவிட்டு போன வரலாறு எல்லாம் இருக்கிறதே. துரோகம் என்பது நிலையானது இல்லை. துரோகம் செய்பவர்களுக்கு எந்த வரலாறும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து