முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலவரையின்றி மக்களவை ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2025      இந்தியா
Parlie

Source: provided

புதுடெல்லி: காலவரையின்றி மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 32 நாட்கள் அவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், ஆகஸ்டு 12-ந்தேதிக்கு பின்னர் சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு 5 நாட்கள் நாடாளுமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டது. இதன்பின்பு கடந்த 18-ந்தேதி அவை மீண்டும் தொடங்கியது.

இந்த கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தன. இதில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக சிறப்பு விவாதம் நடந்தது. இதற்கு பிரதமர் மோடி அவையில் பதிலளித்து பேசியதுடன் அது முடிவடைந்தது.

எனினும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி விவாதிக்க கோரி தொடர்ந்து அவை நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால், அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், நேற்று காலை 11 மணிக்கு மக்களவை தொடங்கியதும், உடனேயே ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அவை கூடியது. அப்போது பேசிய பிர்லா, ஒட்டுமொத்த கூட்டத்தொடரிலும் தொடர்ச்சியாக அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன என்றார்.

இந்த கூட்டத்தொடரில், 419 நட்சத்திர குறியிட்ட கேள்விகள் கேட்க அட்டவணைப்படுத்தப்பட்டு இருந்தன. ஆனால், தொடர்ந்து திட்டமிட்ட முறையில் நடந்த இடையூறுகளால், 55 கேள்விகள் மட்டுமே பதிலளிக்க எடுத்து கொள்ளப்பட்டன.

கூட்டத்தொடரின் தொடக்கத்தில் நாம் அனைவரும் 120 மணிநேரம் விவாதம் நடத்துவோம் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு அலுவல் ஆலோசனை கமிட்டியும் ஒப்பு கொண்டது.

ஆனால், தொடர்ந்து முடக்கம் மற்றும் திட்டமிட்ட இடையூறுகள் ஆகியவற்றால், கூட்டத்தொடரில் 37 மணிநேரமே நாம் விவாதத்தில் ஈடுபட முடிந்தது என அவர் சுட்டி காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை நாடு முழுவதும் மக்கள் பார்த்தனர். நாம் பொதுமக்களுக்கான சிக்கல்கள் மற்றும் விவகாரங்கள், முக்கிய மசோதாக்கள் ஆகியவற்றில் நாடாளுமன்றத்திற்கான கண்ணியத்துடன் விரிவான பொதுநலனுடன் தீவிர மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் நம் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை வைத்திருக்கின்றனர் என்றார்.

இந்த தொடரில், பிரதமர், முதல்-அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரை நீக்கும் மசோதா உள்பட 14 அரசு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் முக்கிய மசோதா ஒன்றும் அடங்கும்.

ஜூலை 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான சிறப்பு விவாதம் நடந்தது. இதற்கு பிரதமர் மோடி அவையில் பதிலளித்து பேசியதுடன் அது நிறைவடைந்தது. ஆகஸ்டு 18-ந்தேதி, இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் சாதனைகள் பற்றிய ஒரு சிறப்பு விவாதம் தொடங்கியது. ஆனால், அது முடிவடையாமலேயே தொடர்ந்து உள்ளது.

இந்நிலையில் ஓம் பிர்லா தொடர்ந்து கூறும்போது, கோஷங்களை எழுப்புவது, கண்டன அட்டைகளை காட்டுவது மற்றும் அவையில் அல்லது நாடாளுமன்ற வளாகத்தில் திட்டமிட்டு முடக்கும் வகையில் செயல்படுவது என்பது நாடாளுமன்றத்தின் கண்ணியம் புண்படும் வகையிலானது.

இந்த கூட்டத்தொடரில் பேசிய விதம் மற்றும் செயல்கள் நாடாளுமன்ற கண்ணியத்துடன் ஒத்து போகாத ஒன்று. அவையில் ஆரோக்கியம் நிறைந்த மரபுகளை கட்டமைப்பதற்காக ஒத்துழைப்பது என்பது நம் அனைவரின் கடமையாகும்.

இந்த கண்ணியம் வாய்ந்த அவையில், கோஷங்களை மற்றும் இடையூறுகளை நாம் தவிர்க்க வேண்டும். தீவிர மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதன்பின் மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது என கூறி அவர் தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து