முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கடற்படைக்கு 2 அதிநவீன போர்க்கப்பல்கள் : ராஜ்நாத் சிங் இன்று அர்ப்பணிக்கிறார்

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2025      இந்தியா
Rajnath-Singh 2023-11-14

Source: provided

டெல்லி : இந்திய கடற்படைக்கு புதிதாக ஐஎன்எஸ் ஹிமகிரி மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகிய 2 போர்க்கப்பல்கள் தயாராகி உள்ளன. அவற்றை இன்று நாட்டுக்கு அர்பணிக்கிறார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

இந்திய பாதுகாப்பு அமைப்பு கொல்கத்தா மற்றும் மும்பையில் இந்த போர்க்கப்பல்களை பி 17 என்ற பெயரில் உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் நவீன தகவல் தொடர்பு அமைப்புகளுடன் உருவாக்கியது.

விசாகப்பட்டினத்தில் ஹிமகிரி மற்றும் உதயகிரி கப்பல்களை ஒரே நேரத்தில் நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமையகமான விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய போர்க்கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கின்றனர்.

இந்த கப்பல்களில் இருந்து சூப்பர்சோனிக் மற்றும் பிரம்மோஸ் போன்ற ஆயுதங்களை கடலில் உள்ள இலக்குகளுக்கு எதிராக செலுத்த முடியும். இந்த கப்பல்களின் நீளம் சுமார் 149 மீட்டர்.

கடுமையான போர்களை எதிர்த்துப் போராடக்கூடிய நவீன அம்சங்களைக் கொண்ட இந்த கப்பல்கள் இந்திய கடற்படையின் முதுகெலும்பாக இருக்கப் போகின்றன என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து