முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திரா திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2025      சினிமா
Indira-Review 2025-08-25

Source: provided

போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் வசந்த் ரவி, அதீத மதுப்பழக்கம் கொண்டவராக இருக்கிறார். அதனால், அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார், இதனால் அவரது மனைவி மெஹ்ரீன் பிர்சாடா, அவர் மீது கோபம் கொள்கிறார். இதற்கிடையே, வசந்த் ரவியின் பார்வை திடீரென்று பறிபோகிறது. இந்த நிலையில், சென்னையில் ஒரே பாணியிலான தொடர் கொலைகள் நடக்கிறது. கொலையாளியை பிடிக்க சரியான துப்பு கிடைக்காமல் தடுமாற, திடீரென்று அதே பாணியில் வசந்த் ரவியின் மனைவியும் உள்பக்கம் தாளிட்ட வீட்டுக்குள் கொலை செய்யப்படுகிறார்.  உண்மையான கொலையாளி யார்?, உள்பக்கம் தாளிட்ட வீட்டுக்குள், வசந்த் ரவியின் மனைவி எப்படி கொல்லப்பட்டார்? இந்த கேள்விகளுக்கான பதில்கள் தான் இந்திரா. இந்த படம் கிரைம் திரில்லர் ரெகுலர் பார்மட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, நாம் யூகிக்க முடியாத திருப்பங்களோடு திகைக்க வைக்கிறது. நாயகன் வசந்த் ரவி, அழுத்தமாக, கண் பார்வை இழந்தவராக மிக கச்சிதமாக நடித்திருக்கிறார். நாயகி மெஹ்ரீன் பிர்சாடா கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.  அஜ்மல் தஷீன் இசையில் பாடலும், பின்னணி இசையும் அருமை. எழுதி இயக்கியிருக்கும் சபரிஷ் நந்தா, சைக்கோ கொலையை கதைக்களமாக கொண்டு திரைக்கதை அமைத்து பெரிய மர்ம முடிச்சோடு படத்தை மிக சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார். மொத்தத்தில், இந்திரா ஒரு சிறப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து