முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கிகளில் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை: மத்திய அரசு விளக்கம்

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, வங்கிகளில் இருந்து தனிநபர் கடன், நகைக்கடன், வீடு உள்ளிட்ட பிற வங்கிக்கடன் பெறுவதற்கு 'சிபில் ஸ்கோர்' எனப்படும் 3 இலக்க எண் கோரப்படுகிறது.

தனிநபரின் கடன்தகுதியை நிர்ணயிக்கும் இந்த மதிப்பெண்ணை இந்திய கடன் தகவல் பணியகம் (சிபில்) வழங்குகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன. இந்த சிபில் ஸ்கோர் போதுமான அளவு இல்லாததால் பலர் கடன் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக முதல் முறை வங்கிக்கடன் பெற முயற்சிப்போரும் இந்த சிபில் ஸ்கோர் இல்லாமல் கடன் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். இதைத்தொடர்ந்து முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

இது தொடர்பாக நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி கூறியதாவது:-

முதல் முறை வங்கிக்கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் பூஜ்ஜியம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக்கூடாது. கடன் நிறுவனங்களின் சிறப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல என ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதைப்போல கடன் விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச சிபில் ஸ்கோரை ரிசர்வ் வங்கி அறிவிக்கவும் இல்லை. ஒழுங்குபடுத்தப்படாத கடன் சூழலில், கடன் வழங்குபவர்கள்தான் தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் பரந்த ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தங்கள் கடன் முடிவுகளை எடுக்கிறார்கள். 

முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என்றாலும், அவர்களது நடத்தை பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும். அந்தவகையில் அவர்களின் கடன் வரலாறு, கடந்த கால திருப்பிச்செலுத்தும் வரலாறு, தாமதமான திருப்பிச் செலுத்தல்கள், தீர்க்கப்பட்ட கடன்கள், மறுசீரமைக்கப்பட்டவை மற்றும் தள்ளுபடி செய்யப்பட்டவை போன்றவற்றை சரி பார்க்க வேண்டும். இவ்வாறு பங்கஜ் சவுத்ரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து