முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்போது பார்லி., தேர்தல் நடந்தால் தி.மு.க. கூட்டணிக்கே வெற்றி: கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2025      தமிழகம்
DMK-Offces 2023 03 31

சென்னை, தமிழ்நாட்டில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் அது தி.மு.க. கூட்டணிக்கே சாதகமாக அமையும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போதைய நிலையில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. அதாவது, ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணி, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.

இந்த நிலையில், பிரபல ஆங்கில இதழான இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர் ஆகியவை இணைந்து ஆய்வின் மூலம் மக்கள் மத்தியில் கருத்து கணிப்பை நடத்தியது. அதாவது, தமிழகத்தில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால், யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது?, நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும்?, அது யாருக்கு சாதகம்? என்றெல்லாம் ஆய்வு நடத்தப்பட்டன. இதில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் அது தி.மு.க. கூட்டணிக்கே சாதகமாக அமையும் என்று தெரியவந்துள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு கடந்த முறையைவிட வாக்கு சதவீதம் குறையும் என்றாலும் வெற்றி வாய்ப்பு அவர்களுக்கே இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அங்கம் வகித்த இன்டியா கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்தக் கூட்டணிக்கு பிப்ரவரி மாத கருத்து கணிப்பின்போது 52 சதவீதமாக உயர்ந்த வாக்கு சதவீதம், தற்போதைய கருத்து கணிப்பில் 48 சதவீதமாக குறைந்துள்ளது.

அதேபோல், 2024-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. தனித்தனியே போட்டியிட்டு மொத்தம் 41 சதவீத வாக்குகளை பெற்றிருந்தன. கடந்த பிப்ரவரி மாத கருத்து கணிப்பின்போது 21 சதவீதமாக குறைந்த நிலையில், தற்போது 37 சதவீதமாக வாக்கு வங்கி அதிகரித்து இருக்கிறது.

பிற கட்சிகளின் வாக்கு சதவீதம் 2024 பாராளுமன்ற தேர்தலின்போது 12 ஆக இருந்த நிலையில், பிப்ரவரி மாத கருத்து கணிப்பின்போது 7 சதவீதமாக சரிந்தது. தற்போது, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, பிற கட்சிகளின் வாக்கு சதவீதம் 15 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், தி.மு.க. கூட்டணியின் வாக்கு சதவீதம் குறைந்து போனாலும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. அதாவது, தி.மு.க. ஆட்சி மீது அதிருப்தியில் இருப்பவர்கள், நடிகர் விஜய் கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. - பா.ஜ.க.வின் வாக்குகளும் இதேபோல் பாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இது தி.மு.க. கூட்டணிக்கே சாதகமாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து