முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடுக்கா திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2025      சினிமா
Kaduka-movie 2025-09-01

Source: provided

வேலை வெட்டி இல்லாத நாயகன் விஜய் கெளரிஷ், தன் வீட்டுக்கு அருகே புதிதாக குடிவரும் நாயகி ஸ்மேஹாவுக்கு காதல் தொல்லை கொடுக்கிறார். மறுபக்கம், விஜய் கெளரிஷின் நண்பர் ஆதர்ஷும் ஸ்மேஹாவை கல்யாணம் செய்துகொள்ள விரும்புவதாக அவரிடம் தெரிவிக்கிறார். விஜய் கெளரிஷின் காதலை ஏற்றுக் கொள்ளும் ஸ்மேஹா, ஆதர்ஷையும் காதலிப்பதாக சொல்கிறார். நண்பர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பது தெரியாமல் காதல் மயக்கத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில், இருவரும் தனித்தனியாக ஸ்மேஹாவை சந்தித்து பேசும்போது, இருவரும் முட்டாளாக்கப்பது தெரிய வருகிறது. அவர் அப்படி செய்ய காரணம் என்ன, என்பதை எதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் சொல்லும் படமே ‘கடுக்கா.  நாயகனாக நடித்திருக்கும் விஜய் கெளரிஷ் அவரது நண்பராக வரும் ஆதர்ஷ் மற்றும் நாயகி ஸ்மேஹா மூவவரும் அழகான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருக்கும் எஸ்.எஸ்.முருகரசு, இளைஞர்களின் எதார்த்தமான வாழ்வியலை நகைச்சுவையாகவும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார்.  படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவையாக நகர்ந்தாலும், இறுதியில் பார்வையாளர்களின் இதயத்தை  கனக்க செய்யும் வகையில் முக்கியமான பிரச்சனையை பற்றி பேசி படத்தை முடித்து பாராட்டு பெறுகிறார்.  மொத்தத்தில், ‘கடுக்கா’ ஓகே ரகம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து