Idhayam Matrimony

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: செப். 1-க்கு பின்னரும் திருத்தங்கள் கோரலாம் : சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2025      இந்தியா
Election Commissioner

Source: provided

புதுடெல்லி : செப்.1-க்குப் பிறகும் பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமை கோரலாம், ஆட்சேபம் தெரிவிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், ஆட்சேபம் தெரிவிக்கவும் செப்.1-ம் தேதி கடைசிநாள் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணையை தொடங்கியது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், பீகார் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரத்தில் பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டி உள்ளதாகக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்ய காந்த், உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான காலத்தை செப். 15 வரை நீட்டிக்க வேண்டும் என்ற ஒரே பிரச்சினை மட்டுமே இன்று (நேற்று) எடுத்துக்கொள்ளப்படும் என்றார். மேலும் அவர், உரிமை கோரல் காலத்தில் ஆதார் ஆவணம் ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த ஏற்றுக்கொள்ளத்தக்க ஆவணங்கங்களின் பட்டியலில் ஆதார் இல்லை. எனினும், ஆதாரை ஏற்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியதை அடுத்து அதை தேர்தல் ஆணையம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அதேநேரத்தில், ஆதார் குறித்த சட்டத்தில் உள்ளதைவிட கூடுதல் மதிப்பை கோர முடியாது என்றும் நீதிபதி சூர்ய காந்த் தெளிவுபடுத்தினார். உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க மனுவுடன் இணைக்க வேண்டிய அனுமதிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்தால் போதும் என்றும் நீதிபதி கூறினார்.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வரைவு பட்டியலில் உள்ள 7.2 கோடி வாக்காளர்களில், 99.5% வாக்காளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க வேண்டும் என்று கோரி விண்ணப்பித்தவர்களைவிட, பெயர் நீக்கம் கோரி சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள்தான் அதிகம். சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தேர்தல் ஆணையம் உடனடியாக நோட்டீஸ் வெளியிடும்.

வாக்காளர்களில் பலர், தங்கள் பெயர் வேறொரு வாக்காளர் பட்டியலிலும் இருப்பதாக முறையிட்டுள்ளார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் பகுதியில் இறப்புக்கான காரணம் கேட்கப்பட்டிருந்தது. தற்போது அதை நீக்குமாறு கோரிக்கை வந்துள்ளது.” என தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய நீதிபதி சூர்ய காந்த், “பெயர் விடுபட்ட வாக்காளர்களின் புகார்களை சேகரிப்பதில் அரசியல் கட்சிகள் சவால்களை எதிர்கொள்கின்றன. இவ்விஷயத்தில் அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையில் நம்பிக்கை பற்றாக்குறையை குறைக்க, சட்ட சேவை துறையில் அதிகாரம் உள்ள தன்னார்வலர்களை நியமிக்கலாம் என்று பரிந்துரைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து