முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2025      தமிழகம்
Murder 2023-07-06

Source: provided

மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை பார்க் டவுன் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). தொழிலதிபரான இவர், முனிச்சாலை பகுதியில் பார்சல் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டு, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த கூடல்புதூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, துணை கமிஷனர் இனிகோ திவ்யன் தலைமையில், உதவி கமிஷனர் பொன் ரகு, இன்ஸ்பெக்டர் ராஜாமணி அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது.

இந்த விசாரணையில், கொலை சம்பவத்தில் பங்குதாரரான கல்லாணை (51) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தநிலையில், நேற்று முன்தினம் அவரை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, கூலிப்படையை ஏவி ராஜ்குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து கல்லாணை, கொலை சம்பவத்தை அரங்கேற்றிய மதுரையை சேர்ந்த விக்னேஷ்வரன் (45), சிவலிங்கம் (43), லாரன்ஸ் (43), ரவிமாறன் (55), ஜெயராஜ் (42), முரளி (44) உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலையான ராஜ்குமாருக்கும், சந்தைப்பேட்டையைச் சேர்ந்த கல்லாணை என்பவரும் சேர்ந்து முனிச்சாலையில் பார்சல் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வந்தனர். இதில், இவர்கள் இருவருக்கும் இடையே லாப தொகையை பகிர்ந்து கொள்வதில் ஏற்கனவே பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. மேலும், கல்லாணையின் மகனை, பங்குதாரராக சேர்க்க வேண்டும் என ராஜ்குமாரிடம் வலியுறுத்தி உள்ளார். இதிலும் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக, ராஜ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது மற்றொரு வாகனத்தை அவர் மீது மோத வைத்துள்ளனர். இதில் அவர் லேசான காயங்களுடன் தப்பித்துள்ளார். இருப்பினும் அவரை எப்படியாவது கொலை செய்து விட வேண்டும் என நினைத்து திட்டம் போட்டுள்ளனர்.

இந்தநிலையில், கல்லாணை வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அதற்கு குறிப்பிட்ட பணத்தையும் தருவதாக பேரம் பேசி பணத்தையும் கொடுத்து அவர்களை கூலிப்படையாக மாற்றி உள்ளார். அதன்படி, சம்பவத்தன்று ராஜ்குமாரை கண்காணித்து, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து