முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      இந்தியா
YouTube 2024-03-27

பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா  தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் நடைபெற்ற மின்னணு ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் துவக்க விழாவில் அந்த மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டார். அந்த சங்கத்தின் சார்பில் சித்தராமையாவிடம் வழங்கப்பட்ட பரிந்துரையில், நெறிமுறையின்றி செயல்படும் யூடியூப் செய்தி சேனல்களால் பத்திரிகை துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் யூடியூப் செய்தி சேனல்களுக்கு லைசென்ஸ் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும் எனவும் மின்னணு ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று, தொலைக்காட்சி சேனல்களைப் போலவே யூடியூப் செய்தி சேனல்களும் அரசிடம் இருந்து லைசென்ஸ் பெற்றே செயல்பட அனுமதிக்கும் முறையை கொண்டுவர கர்நாடக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இது குறித்து பேசிய சித்தராமையா, மிரட்டல் மற்றும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு. செய்திகளை ஒளிபரப்பு செய்யும் யூடியூப் சேனல்களுக்கு லைசென்ஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து