முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      உலகம்
Pakis

Source: provided

தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும் ஆனால், இந்தியா நிராகரிக்கிறது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணைப் பிரதமருமான இஷாக் தர் தெரிவித்துள்ளார்.

தோஹாவில் நடைபெற்ற அரபு - இஸ்லாமிய அவசர உச்சிமாநாட்டின் இடையே பேட்டியளித்த இஷாக் தர், இந்தியா உடனான விவகாரம், கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் உள்ளிட்டவை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: இந்தியா உடனான இருதரப்பு விவகாரங்களில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதில் எங்களுக்கு (பாகிஸ்தானுக்கு) ஆட்சேபனை இல்லை. ஆனால், இது இரு தரப்பு விவகாரம் என கூறி மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது. கடந்த ஜூலை 25ம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்து, இந்தியாவுடனான பேச்சுவார்த்தை என்ன ஆனது என்று கேட்டேன். அதற்கு அவர், இது ஒரு இருதரப்பு பிரச்சினை என்று இந்தியா கூறுகிறது என தெரிவித்தார்.

இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது. பேச்சுவார்த்தை மூலம் மோதல்களுக்கு அமைதி வழியில் தீர்வு காண பாகிஸ்தான் எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது. அனைத்துத் தரப்பில் இருந்தும் நேர்மையும் தீவிரமும் இருந்தால், பேச்சுவார்த்தைதான் முன்னேற்றத்துக்கான சிறந்த வழி. பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் அதேநேரத்தில், பாகிஸ்தானின் இறையாண்மை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளப்படாது.

தனது மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருக்கிறது. இதற்கான போராட்டத்தில் பாகிஸ்தான் மிகப் பெரிய தியாகங்களைச் செய்துள்ளது. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான். இருந்தும், இந்தியா பாகிஸ்தானை குற்றம் சாட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருதலைப்பட்சமாக நிறுத்தவோ, ரத்து செய்யவோ முடியாது. தண்ணீரை நிறுத்தும் எந்த ஒரு முயற்சியும் போர் அறிவிப்பாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் தெளிவுபடுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் அணுசக்தி முற்றிலும் தற்காப்புக்காக மட்டுமே உள்ளது. அதைப் பயன்படுத்த எந்த நோக்கமும் இல்லை. அதேநேரத்தில், பாகிஸ்தானின் இறையாண்மை பாதிக்கப்பட்டால், அது தன்னை தற்காத்துக்கொள்ள எந்த விலையையும் கொடுக்கும். அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இவ்வாறு இஷாக் தர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து