முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ.க்கு புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் 2 பேர் நியமனம்

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி. சி.ஐ) தேர்வு குழுவுக்கு  புதிய தேர்வுக்குழு உறுப்பினராக முன்னாள் பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா நியமிக்கப்படுகிறார்கள்.

ஆர்.பி.சிங், ஓஜா...

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி. சி.ஐ) தேர்வு குழுவுக்கு முன்னாள் வேகப்பந்து வீரர் அஜித் அகர்கர் தலைவராக உள்ளார். சுபர்கோ, பானர்ஜி, அஜய் ரத்ரா, எஸ்.சரத் ஆகிய 4 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் எஸ்.சரத், சுபர்கோ பானர்ஜி ஆகியோரின் பதவி காலம் முடிவடைகிறது. இதனால் தேர்வு குழுவில் இருந்து அவர்கள் வெளியேறுவார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய தேர்வுக்குழு உறுப்பினராக முன்னாள் பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா நியமிக்கப்படுகிறார்கள்.

பின்னர் அறிவிப்பு...

கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கும் இந்த கூட்டத்தில் ஆர்.பி.சிங், ஓஜா ஆகியோர் பெயர்கள் தேர்வுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்படும். இடது கை வேகப்பந்து வீரரான ஆர்.பி.சிங் 2007 -ம் ஆண்டு டோனி தலைமையில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்று இருந்தார். 39 வயதான அவர் 82 சர்வதேச போட்டிகளில் 124 விக்கெட் கைப்பற்றியுள்ளார். மத்திய மண்டலத்தில் இருந்து அவர் தேர்வுக்குழு உறுப்பினர் ஆகிறார். இடது கை சுழற்பந்து வீரரான ஓஜா தெற்கு மண்டலத்தில் இருந்து தேர்வுக்குழு உறுப்பினரா கிறார். அவர் 24 டெஸ்டில் 113 விக்கெட் கைப்பற்றியுள் ளார். ஒருநாள் போட்டியில் 21 விக்கெட்டும் (18 போட்டி), 20 ஓவர் ஆட்டத்தில் 10 விக்கெட்டும் (6 போட்டி) எடுத்தவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து