முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காகிதப்புலி அல்ல... நாங்கள் கரடி: அதிபர் ட்ரம்ப் விமர்சனத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் பதிலடி

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2025      உலகம்
Trump-Putin 2024-11-11

செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யாவை விமர்சனம் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ரஷ்யா அதிபர் பதிலடி கொடுத்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ரஷ்யா போர் தொடுத்தது. நேட்டோவில் சேரும் முடிவை உக்ரைன் கைவிட கோரியும், ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலும் ரஷ்யா போரில் ஈடுபட்டது. உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷ்யா தீவிர போர் தொடுத்தது.

உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமித்து உள்ளது. இந்த சூழலில், ஐ.நா. பொதுச்சபையின் கூட்டத்தில் பங்கேற்று ட்ரம்ப் பேசினார். அதன் ஒரு பகுதியாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் சந்தித்து பேசினார். அப்போது அவர், ரஷ்யா பலவீனத்துடன் உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அது கைப்பற்றிய அனைத்து பகுதிகளையும் திரும்ப எடுத்து கொள்ள வேண்டும் என ஜெலன்ஸ்கியுடன் பேசும்போது ட்ரம்ப் கூறினார். 

ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து தன்னுடைய பகுதிகளை உக்ரைன் திரும்ப எடுத்து கொள்ளும். அதற்காக போரிட்டு வெற்றி பெறும் என நினைக்கிறேன் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டார். தொடர்ந்து அவர், உண்மையான ராணுவ அதிகாரம் கொண்ட எந்த ஒரு நாடும் போரில் வெற்றி பெறுவதற்கு ஒரு வாரம் போதும். இப்படி மூன்றரை ஆண்டுகளை எடுத்து கொள்ளாது. இதனால் ரஷ்யா ஒன்றும் தனித்துவ நாடு அல்ல. உண்மையில், அவர்கள் ஒரு காகிதப்புலி போன்று இருக்கிறார்கள் என கிண்டலாக கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்த ரஷ்யா, பல தடைகளை விதித்தபோதும், பொருளாதார ரீதியாக நாங்கள் நிலைத்து நிற்கிறோம். ரஷ்யா ஒன்றும் காகிதப்புலி அல்ல. ஆனால், நாங்கள் உண்மையான கரடி என்று தெரிவித்து உள்ளது. ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதனை மறுத்ததுடன், ஜெ கூறிய விசயங்களை கேட்டு விட்டு ட்ரம்ப் கூறுகிறார். அந்த வகையில் ஆய்வு செய்து விட்டு அவர் இப்படி கூறியுள்ளார். உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருகிறது என்றும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து