முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுகு வலிக்கு சிகிச்சை : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 6 மாதம் ஓய்வு

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2025      விளையாட்டு
shreyas

Source: provided

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர், பி.சி.சி.ஐ.-யிடம் ரெட்-பால் (டெஸ்ட்) கிரிக்கெட்டில் இருந்து 6 மாதம் காலம் விலகி இருக்க அனுமதி கேட்ட நிலைியல் அவருக்கு பி.சி.சி.ஐ. அனுமதி வழங்கியுள்ளது.

பி.சி.சி.ஐ. தகவல்...

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர், பி.சி.சி.ஐ.-யிடம் ரெட்-பால் (டெஸ்ட்) கிரிக்கெட்டில் இருந்து 6 மாதம் காலம் விலகி இருக்க அனுமதி கேட்டுள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் வேண்டுகோளை பி.சி.சி.ஐ. ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் அவருடைய பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை. அதேபோல் ரஞ்சி கோப்பை சாம்பியனுக்கு எதிராக ரெஸ்ட் ஆப் இந்தியா விளையாடும் இரானி கோப்பைக்கும் அவருமைய பெயர் பரிசீலனை செய்யப்படமாட்டாது என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

முதுகு வலி காரணமாக... 

இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் விளையாடிய அவர், 2ஆவது டெஸ்டில் இருந்து விலகினார். முதுகு வலி காரணமாக லண்டனில் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதில் இருந்து மீண்டும் வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகள் மற்றும் முதல்தர போட்டிகளில் விளையாடும் போது, அசௌகரியமாக உணர்ந்துள்ளார். இதனால் டெஸ்ட் மற்றும் முதல்தர போட்டிகளில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தார். தனக்கு 6 மாதம் ஓய்வு தேவை என பி.சி.சி.ஐ.-யிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில், பி.சி.சி.ஐ. சம்மதம் தெரிவித்துள்ளது.

2022-ம் ஆண்டு முதல்...

ஐபிஎல் 2025 தொடருக்குப்ப பிறகு துலீப் டிராபி அரையிறுதியில் விளையாடினார். அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் விளையாடினார். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷ்ரேயாஸ் அய்யருக்கு முதுகில் பிரச்சினை ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்போது காயத்தின் வீரியம் அதிகமானது. இதனால் ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. அதன்பின் செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார். 2023 ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து