முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2025      தமிழகம்
Puli 2024-11-06

Source: provided

ஸ்ரீவில்லிபுத்தூர்: மேகமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு  இரவு பற்றிய காட்டுத்தீ 2-வது நாளாக தொடர்ந்து எரிந்து வருகிறது. காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட செண்பகத்தோப்பு வனப்பகுதியில் அடர்ந்த மரங்கள், ஆண்டு முழுவதும் தண்ணீர் வரும் நீரோடைகள் உள்ளதால் யானை, சிறுத்தை, மான், காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.

செண்பகத் தோப்பு அடிவாரத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அழகர்கோவில் பீட்டுக்கு உட்பட்ட மலைச்சரிவில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு  மாலை காட்டுத்தீ பற்றியது. இரவில் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாகப் பரவியது. நேற்று 2-வது நாளாக தீ எரிந்து வருகிறது. ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் முருகன் உத்தரவில் வனச்சரகர் செல்லமணி தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அடர்ந்த மரங்கள் மற்றும் வன விலங்குகள் நிறைந்த பகுதியில் காட்டுத்தீ எரிவதால் விலங்குகள் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வன உயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து