முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருமல் மருந்து விவகாரம்: இ.பி.எஸ். கொண்டு வந்த தீர்மானத்திற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2025      தமிழகம்
Ma Subramani

Source: provided

சென்னை : கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011-ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் மத்தியப்பிரதேச மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறையிடம் இருந்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது.

அக்கடிதத்தில் செப்.4 முதல் மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்திற்கு தொடர்புடையதா கருதப்படும் மருந்து கோல்ட்ரிட்ப் சிரப் (பாராசிட்டமால், பினைல் ப்ரைன் ஹைட்ரோகுளோரைடு, குளோரிபெனிரளமன் மெலேட் சிரப்) குறித்த விவரம் பெறப்பட்டது. இது தொடர்பாக, அக்.,1-ம் தேதி விடுமுறை தினமாக இருத்தாலும், அன்றைய தினமே சமார் 4.00 மணியளவில் துணை மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் உத்தரவின் பேரில் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் தலைமையிலா குழு ஸ்ரீசன் பர்மசியூட்டிகள் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டன. மேலும் அக்.10-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சந்தேகத்திற்குரிய கோல்ட்ரிப் சிரப் விற்பனை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டது.

அக்குழு அக்., 1, 2 ஆம் தேதி மேற்கொண்ட தொடர் ஆய்வில் மருந்துகள் விதிகள், 1945-ன் கீழ் விதிமீறல்கள் கண்டறி யப்பட்டு, சர்ச்சைக்குரிய மருந்தான உள்ளிட்ட 5 மருந்துகள் அவசர பகுப்பாய்வு எடுக்கப்பட்டு அரசு மருத்துகள் பகுப்பாய்வு கூடம், சென்னைக்கு அனுப்பப்பட்டது. பகுப்பாய்வின் முடிவில் டைஎதிலீன் கிளைகால்  என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள் கோல்ட்ரிப் சிரப்பில் 48.6 சதவீதம் இருப்பதாக அக்., 2 அன்று கண்டறியப்பட்டது.

மேலும் மேற்கூறிய நிறுவனத்திலிருந்து ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிப் மருந்து விநியோகிக்கப்பட்ட தகவல் கிடைக்கப்பட்ட விவரம் பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடர்பான தகவல்கள் அக். 2-ம் தேதி மேல்நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. சர்ச்சைக்குரிய மருந்தை பற்றிய விவரங்கள் எல்லா மருத்துகள் ஆய்வர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, அக். 2 அன்று கோல்ட்ரிப் சிரப் முடக்கம் செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரீ சன் பார்மசூட்டிகள் தயாரித்த அனைத்து மருந்துகளும் முடக்கம் செய்யப்பட்டட்ன. மேலும் அக்., 3-ம் தேதி இம்மருந்து குறித்த எச்சரிக்கையும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டது.

ம.பி.யில் இருமல் மருந்துக்கு முதல் குழந்தை உயிரிழந்த 25 நாட்களுக்குப் பிறகுதான் தமிழ்நாட்டுக்குத் தகவல் தெரிவித்தனர். 48 மணி நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்து, அந்நிறுவனத் தயாரிப்பு 126 மருந்துகளும் தடை செய்யப்பட்டன. இருமல் மருந்து நிறுவனத்துக்கு கடந்த 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில்தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச அரசும் இந்த மருந்து நல்ல மருந்து எனச் சான்றிதழ் தந்திருக்கிறது. 

தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளை மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை செய்திருக்க வேண்டும். கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011-ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை. 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை 5 முறை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்து அபராதமும், உற்பத்தி நிறுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது எனினும், கடந்த ஆண்டில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாததால் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து