முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் சட்டசபை தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

பாட்னா, பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. அதில், வாக்காளர்களை கவர ரொக்கப்பணம், மதுபானம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுப்பதற்கான விரிவான செயல்திட்டம் வகுப்பது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. அதில், மத்திய நேரடி வரிகள் வாரியம், அமலாக்கத்துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.

பரிசுப்பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மாநில எல்லை மற்றும் சர்வதேச எல்லை வழியாக பொருட்கள் கடத்தி வரப்படுவதை கண்காணிக்குமாறு தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டது. பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியது. உளவு தகவல்களை பகிர்ந்து கொள்வது உள்பட அமைப்புகளிடையே ஒத்துழைப்பு நிலவ வேண்டும் என்றும் தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து