முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடியார் பின்னால் மக்கள் சக்தியுள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2025      தமிழகம்
RBUdhayakumar 2024-12-22

மதுரை, எடப்பாடி பழனிசாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், தி.மு.க. அரசு சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் ஜனநாயகப் படுகொலை செய்கிறது. எடப்பாடி பழனிசாமியின் பேச்சை நேரலை செய்யாமல் தி.மு.க. அரசு இருட்டடிப்பு செய்து சில்லறைத்தனமாக நடந்து கொள்கிறது. இருமல் மருத்து தயாரிப்பு விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்யவில்லை. தி.மு.க. அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை. தொண்டர் நாடாள முடியுமா என்பதற்கு எடப்பாடி பழனிசாமியின் நான்கரை ஆண்டுகால ஆட்சியே சாட்சி. எடப்பாடி பழனிசாமி திட்டங்களில் புரட்சி ஏற்படுத்தி உள்ளார். முல்லை பெரியாறு விவகாரம் குறித்து முதல்வர் இதுவரை பேசவில்லை.

எந்தவொரு பிரச்னைக்கும் தி.மு.க. அரசு தீர்வு காணவில்லை. மக்களின் ஜீவாதர உரிமைகளான முல்லைப் பெரியாறு, காவிரி, கச்சத்தீவிற்கு பாதுகாப்பு இல்லை. மொத்தத்தில் தமிழகத்தில் ஜனநாயகம் செத்து விட்டது. தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பற்ற முடியாது. ஸ்டாலின் பின்னால் எத்தனை சக்திகள் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது. தி.மு.க. ஆட்சியில் இம் என்றால் கைது, ஏன் என்றால் சிறைவாசம். 2026 ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களாட்சி மலர போகிறது. எடப்பாடி பழனிசாமி யார் யாருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என முடிவு எடுப்பார்.

கூட்டணி கட்சி, தேசிய கட்சி, தோழமைக் கட்சி, துணை நின்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து அமைச்சர் பதவிகள் குறித்து முடிவெடுப்பார். வேடிக்கை பார்க்கும் தினகரன் கருத்துக்கு பதில் சொல்லி பெரிதாக்க வேண்டாம். , விஜய் பரிச்சை எழுதிய பின்னர் பார்க்கலாம், விஜய் அனுபவம் உள்ளவர்களுடன் பரிச்சை எழுத வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து