முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தேர்தலுக்கான மனுதாக்கல் நிறைவு: விரைவில் பீகார் தேர்தல் பிரச்சார களத்தில் பிரதமர் மோடி, ராகுல்..!

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2025      இந்தியா
Modi-Rahul 2024-04-10

பாட்னா, சட்டசபை தேர்தலுக்கான மனுதாக்கல் முடிந்த நிலையில் விரைவில் பீகார் தேர்தல் பிரச்சார களத்தை பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் முற்றுகையிடவுள்ளனர்.

243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ம் தேதியும், மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு 11-ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. இதில் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்தது. வேட்புமனு திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள் நேற்று முன்தினம் ஆகும்.

இதைப்போல 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடந்தது. இந்த மனுக்கள் பரிசீலனை நேற்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் மனுக்கள் திரும்ப்பெற 23-ம் தேதி கடைசி நாள் ஆகும். மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகா கூட்டணி (இன்டியா கூட்டணி) நேருக்கு நேர் களத்தில் உள்ளன.

மறுபுறம் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சியும் பீகார் சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் காண்கிறது. அதேநேரம் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிடவில்லை.மாநிலத்தில் முதல்கட்ட தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான நாள் மற்றும் 2-வது கட்ட தேர்தலில் வேட்பு மனுதாக்கல் முடிந்தது.

இதற்கிடையில், மாநிலத்தில் தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி இருந்தனர். வேட்பு மனுதாக்கல் முடிந்ததால் இனி தேர்தல் பிரசாரம் அனல் பறக்கப்போகிறது. தேர்தல் கள பரபரப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் பிரதமர் மோடி வருகிற 24-ம் தேதி பீகாரில் பிரசாரத்தை தொடங்குகிறார். இதைப்போல மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் முதல்வர்கள் ஆகியோரும் விரைவில் பீகார் தேர்தல் பிரசார களத்தை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பீகார் தேர்தல் களத்தை தலைவர்கள் முற்றுகையிட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து