முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - தெ.ஆ. டெஸ்ட் போட்டி: குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2025      விளையாட்டு
India 2024-01-29

Source: provided

கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60 என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 14-ம் தேதி...

முதல் டெஸ் போட்டி வரும் நவ.14ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் ஈடர்ன் கார்டன் திடலில் தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் விலையை கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பெங்கால் அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளுக்கும் ரூ.60 (ஐந்து நாள்களுக்கு ரூ.300) முதல் ரூ.250 (ஐந்து நாள்களுக்கு ரூ.1,250) வரையிலான டிக்கெட் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்ய...

இந்த டிக்கெட்டுகளை டிஸ்ட்ரிக்ட் செயலியில் இன்று (அக்.20) மதியம் 12 முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித், கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாததால் போட்டிக்கான விலை குறைக்கப்படதாகக் கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க அணி 2025ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. 2019ஆம் ஆண்டு இந்தியா - வங்கதேசத்துக்கு இடையேயான பிங்க் பந்து டெஸ்ட்டுக்குப் பிறகு இந்தப் போட்டி முதல்முறையாக நடைபெறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து