முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் உலகக்கோப்பை 22வது லீக்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2025      விளையாட்டு
Woman 2024 07 24

Source: provided

கொழும்பு : மகளிர் உலகக்கோப்பை 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு தென்ஆப்பிரிக்க அணி 312 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

தலா ஒரு முறை... 

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.

22வது லீக் ஆட்டம்...

இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா , பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வரும் அந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

மழையால் பாதிப்பு...

இதையடுத்து, தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் லோரா, பிரிட்ஸ் களமிறங்கினர். பிரிட்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் (0 ரன்கள்) ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய லுஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது, ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டது. இதையடுத்து ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

312 ரன்கள் இலக்கு...

இதனை தொடர்ந்து லுஸ் மற்றும் கேப்டன் லோரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். லுஸ் 59 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கேப்டன் லோரா 82 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். இதையடுத்து களமிறங்கிய பிற வீராங்கனைகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்படி, நடினி டி கிரெல் 16 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். இறுதியில் தென்னாப்பிரிக்கா 40 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் மரிசனி கெப் 43 பந்துகளில் 68 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதையடுத்து 40 ஓவர்களில் 313 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து