முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூரில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்த இ.பி.எஸ்

புதன்கிழமை, 22 அக்டோபர் 2025      தமிழகம்
EPS 2025-10-22

திருவாரூர், திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த தீபாவளி தொடங்கி தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அறுவடை செய்யும் நிலையிலிருந்த குறுவை நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் வயல்வெளிகளிலேயே சாய்ந்து முளைக்கத் தொடங்கியுள்ளன.

நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாத காரணத்தால், கொள்முதல் நிலையங்களில் வாசல்களிலேயே விவசாயிகளின் தற்போதைய குறுவை அறுவடை நெல் கொள்முதல் செய்யாமல் செயற்கையாக தேக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் விவசாயிகளின் நெல் தொடர் மழையில் நனைந்து குவியல், குவியல்களாக கிடக்கின்றன. இதனால், விவசாயிகள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. அதுபோல், திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை நடவு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆன இளம் சம்பா பயிர்களில் பெரும்பாலான நெற்பயிர்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை சந்திக்கவும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்களையும், மழை நீரால் சூழப்பட்டுள்ள இளம் சம்பா சாகுபடி பயிர்களை பார்வையிடவும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான கே.பழனிசாமி நேற்று திருவாரூர் மாவட்டத்துக்கு வருகை தந்து பல்வேறு இடங்களில் பார்வையிட்டு விவசாயிகளையும் சந்தித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் உடன் இருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து