முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிக்பாஷ் லீக்: அஸ்வின் விலகல்

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      விளையாட்டு
Ashwin 2

Source: provided

பிக்பாஷ் லீக் (பி.பி.எல்), ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிரபலமான டி20 லீக் போட்டியாகும். இதன் 15-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி முதல் ஜனவரி 25-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான சிட்னி தண்டர் அணி, இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை ஒப்பந்தம் செய்திருந்தது. அவர் இந்த சீசனில் கடைசி கட்ட போட்டிகளில் மட்டும் விளையாட இருந்தார்.

இந்நிலையில் இந்த பிக்பாஷ் சீசனிலிருந்து முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அஸ்வின் தனது சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார். 

பஞ்சாப் வீராங்கனைகளுக்கு பரிசு 

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்தது. இறுதிப்போட்டியில் இதுவரை யாரும் விரட்டிப்பிடிக்காத ஒரு இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களில் சுருட்டினர். இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது.

வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பஞ்சாபை சேர்ந்த வீராங்கனைகளான ஹர்மன்ப்ரீத் கவுர், அமன்ஜோத் கவுர் ஆகியோருக்கு தலா ரூ. 11 லட்சமும், பீல்டிங் பயிற்சியாளர் முனிஸ் பாலிக்கு ரூ.5 லட்சமும் வெகுமதி பரிசாக வழங்கப்படும் என பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

லக்னோ அணியில் டாம் மூடி

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்த வருடம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த தொடரில் லக்னோ அணி 7வது இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். தொடரின் அடுத்த சீசன் (2026) அடுத்த மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கான லக்னோ அணியின் கிரிக்கெட் இயக்குநராக ஆஸ்திரேலியாவின் டாம் மூடியை நியமித்து லக்னோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை லக்னோ நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஜுலான் கோ ஸ்வாமி பெருமிதம்

உலகக் கோப்பை வென்றது தொடர்பாக தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி கூறியதாவது: இந்த உலகக் கோப்பைக்கு முன் எனக்காக அதைச் செய்வதாக அவர்கள் எனக்கு உறுதியளித்தார்கள். 2022-ம் ஆண்டு நாங்கள் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியவில்லை. அதன்பிறகு, ஹர்மனும் ஸ்மிருதியும் நள்ளிரவில் என் அறைக்கு வந்து, 'அடுத்த உலகக் கோப்பையில் நீங்கள் இருப்பீர்களா என எங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்காக அந்தக் கோப்பையை நாங்கள் வெல்வோம் என சொன்னார்கள். இறுதியாக, அவர்கள் அதைச் செய்தார்கள், அதனால்தான் நாங்கள் அனைவரும் இப்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.

தீப்தி சர்மா டி.எஸ்.பி.-யாக நியமனம்

உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடிய தீப்தி சர்மாவுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்படுவதாக உத்தரப் பிரதேச டிஜிபி அறிவித்துள்ளார். நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தீப்தி சர்மா, 212 ரன்கள் குவித்து 22 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியா கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இறுதி ஆட்டத்தில் 58 ரன்கள் விளாசிய தீப்தி சர்மா, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், தொடர் நாயகி விருதையும் வென்றார். இந்த நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் திறமைமிகு வீரர் திட்டத்தின் கீழ், தீப்தி சர்மாவை காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமித்து கெளரவிப்பதாக அம்மாநில காவல்துறை தலைவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முக்கிய வீரரை விடுவிக்கும் ஐதராபாத்..?

முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மினி ஏலத்திற்கு முன் தங்களது அணியிலிருந்து அதிரடி வீரரான ஹென்ரிச் கிளாசெனை விடுவிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சீசனில் ரூ.23 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு தக்க வைக்கப்பட்ட அவரை விடுவித்து மினி ஏலத்தில் அதைவிட குறைந்த தொகைக்கு வாங்க ஐதராபாத் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிளாசென் ஐதராபாத் அணிக்காக 2023 - 2025 வரை 3 சீசன்களில் விளையாடி உள்ளார். இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து