Idhayam Matrimony

அடுத்த வருடம் இந்தியா வருகிறார் அதிபர் ட்ரம்ப்

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      உலகம்
Trump 2024-12-21

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த வருடம் இந்தியா வருகிறார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பின்னர் ரஷிய நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக காட்டி, இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

இதனால் இந்தியா-அமெரிக்கா இடையிலான பொருளாதார உறவுகளில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவானது. அதே சமயம், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாக நிறுத்துவோம் என பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கூறி வருகிறார். 

 

இந்த நிலையில், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை மோடி நிறுத்திவிட்டார் என்று ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;- இந்தியா உடனான நமது பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டார் என்பது நல்ல விஷயம். அவர் எனது நண்பர், சிறந்த மனிதர். என்னை அவர் இந்தியாவிற்கு வருமாறு அழைத்தார். நான் அடுத்த வருடம் இந்தியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து