எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : 2026-ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கு 5 அணிகள் தக்கவைத்துள்ள வீராங்கனைகளின் விவரம் வெளியாகியுள்ளது.
டெல்லியில் ஏலம்...
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கான வீராங்கனைகளின் ஏலம் வருகிற 27-ம் தேதி டெல்லியில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் ரூ.15 கோடி செலவிடலாம். அத்துடன் 5 வீராங்கனைகளை தக்க வைத்துக் கொள்ளலாம். அதன்படி தக்கவைக்கப்படும் வீராங்கனைகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீராங்கனைகளின் விவரம் பின்வருமாறு:-
வீராங்கனைகளின்...
மும்பை இந்தியன்ஸ்: நாட் சிவெர் பிரண்ட், ஹர்மன்பிரீத் கவுர், ஹெய்லி மேத்யூஸ், அமன்ஜோத் கவுர், கமலினி., ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஸ்மிர்தி மந்தனா, ரிச்சா கோஷ், எலிஸ் பெர்ரி, ஸ்ரேயங்கா பட்டீல்., குஜராத் ஜெயண்ட்ஸ்: ஆஷ்லி கார்ட்னர், பெத் மூனி, உ.பி. வாரியர்ஸ்: ஸ்வேதா செராவத்., டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, அனபெல் சுதர்லாண்ட், மரிஜானே காப், நிக்கி பிரசாத்.
கிரந்தி விடுவிப்பு...
இதில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் மகளிர் உலகக்கோப்பையில் தொடர் நாயகியாக ஜொலித்த ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா மற்றும் அலிசா ஹீலி, சோபி எக்லெஸ்டோன், கிரந்தி கவுட் உள்ளிட்டோரை உ.பி. வாரியர்ஸ் விடுவித்துள்ளது. இதே உலகக்கோப்பையில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் சதம் அடித்தவரான தென் ஆப்பிரிரிக்காவின் லாரா வோல்வாார்ட் மற்றும் ஹர்லீன் தியோல், லிட்ச்பீல்டு, டியான்ட்ரா டோட்டின் ஆகியோரை குஜராத் ஜெயன்ட்சும் கழற்றிவிட்டுள்ளது. இதே போல் டெல்லி அணியை கடந்த மூன்று சீசனிலும் வழிநடத்திய ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


