Idhayam Matrimony

தொகுதிவாரியாக நேர்காணல்: கிருஷ்ணகிரி தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சனிக்கிழமை, 8 நவம்பர் 2025      தமிழகம்
cm 2025-01-23

Source: provided

கிருஷ்ணகிரி : ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றால் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் என கிருஷ்ணகிரி தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் பணிகள் குறித்து தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதன்படி, கிருஷ்ணகிரி தி.மு.க. மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தொகுதியில் கட்சி செயல்பாடுகள், கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

எஸ்.ஐ.ஆர். பணிகளில் உள்ள குழப்பங்களால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது என்பதால் வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளுக்கு தி.மு.க.வினர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதேபோன்று, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி போட்டியிடும் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றால் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் என கிருஷ்ணகிரி தி.மு.க. மாவட்ட செயலாளரை முதல்வர் எச்சரித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து