எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,300-க்கும், சவரன் ரூ.90,400-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. இதன்படி கடந்த மாதம் (அக்டோபர்) 17-ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த மாதம் 22-ம் தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது. அதன் தொடர்ச்சியாக 28-ம் தேதி சவரனுக்கு ரூ.2,200-ம் சரிந்தது. இப்படியாக விலை குறைந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அதிலும் ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலையிலேயே ஏறுவதும், பின்னர் குறைவதுமாக நீடிக்கிறது.
கடந்த 3 நாட்களுக்கு முன் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, நேற்று முன்தினம் விலை குறைந்திருந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 270-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. ஏற்ற-இறக்கத்தில் காணப்பட்டு வந்த வெள்ளி விலையில் நேற்று முன்தினம் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,300-க்கும், சவரன் ரூ.90,400-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், விலை மாற்றமின்றிஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


