முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

36-வது பிறந்தநாள்: தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 9 நவம்பர் 2025      தமிழகம்
Cm 2025-02-20

Source: provided

சென்னை : 36-வது பிறந்தநாளை முன்னிட்டு தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பீகார் சட்டமன்றத் தேர்தல் 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடந்து முடிந்த நிலையில் நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இன்டியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் நேற்று (நவம்பர் 9) தனது 36வது பிறந்தநாளை ஆர்ஜேடி தலைவரும் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் கொண்டாடினார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

தம்பி தேஜஸ்வி யாதவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பீகாரில் புத்துணர்வு பெற்றுள்ள சமூகநீதி இயக்கத்தின் உந்துசக்தியாக எழுந்து, கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கையளிப்பவராகத் தாங்கள் இருக்கிறீர்கள். தங்களது தலைமையில் ஒரு புதிய அத்தியாயத்தின் விளிம்பில் பீகார் இருக்கும் நிலையில், சமத்துவம், தரமான கல்வி, வேலைவாய்ப்புகள், மாண்பு என அவர்களது எதிர்பார்ப்புகளைத் தாங்கள் நிறைவு செய்வீர்கள் என நம்புகிறோம். இந்த வரலாற்றுப் பாதையில் தொடர்ந்து வலிமையோடும், நல்ல உடல்நலத்தோடும், துணிச்சலோடும் தாங்கள் தொடர விழைகிறேன்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து