முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவில் டிச. 10 முதல் சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2025      உலகம்
Tik-Tok 2023 04 04

Source: provided

சிட்னி : ஆஸ்திரேலியாவில் ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024 என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ தடை செய்கிறது. இது வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், எக்ஸ், யு டியூப், ஸ்னாப்சாட் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் மனம், உடல் நலம் பாதிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவற்றை தடை செய்யவேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024 என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ தடை செய்கிறது. இது வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து