முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோகோவிச் 101-வது பட்டம்

திங்கட்கிழமை, 10 நவம்பர் 2025      விளையாட்டு
Jokovic 2023-09-06

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த ஹெலெனிக் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) - லோரென்சோ முசெட்டி (இத்தாலி) மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார். இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 4-6, 6-3 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜோகோவிச் வென்ற 101-வது பட்டம் இதுவாகும்.

மே.தீவுகள்- நியூசி., போட்டி ரத்து

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று (நவம்பர் 10) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட் செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்திருக்கையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. 

அதன் பின், மழை நின்றதும் ஆட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே மழை தீவிரமடைந்ததால் ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. அப்போது, மேற்கிந்தியத் தீவுகள் அணி 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 38 ரன்கள் எடுத்திருந்தது. மழை நின்றபின் மீண்டும் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழையின் தீவிரம் குறையாததால் போட்டி முடிவு எட்டப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (11-ம் தேதி) ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாகீன் அப்ரிடி தலைமையிலான அந்த அணியில் பாபர் அசாம், ரிஸ்வான், பகர் ஜமான், சைம் அயூப், அப்ரார் அகமது போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 

பாகிஸ்தான் அணி விவரம்: ஷாகீன் அப்ரிடி (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், பைசல் அக்ரம், பகர் ஜமான், ஹரிஸ் ரவுப், ஹசீபுல்லா, ஹுசைன் தலாத், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் ஆகா. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து