முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட வாரியாக விநியோகம் செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை நிரப்புவது எப்படி?

திங்கட்கிழமை, 10 நவம்பர் 2025      தமிழகம்
Election 2024-04-08

சென்னை, வாக்காளர்களுக்கு மாவட்ட வாரியாக எஸ்.ஐ.ஆர். படிவம் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் அதை எப்படி பூர்த்தி செய்வது என்பன குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணியை தேர்தல் ஆணையம் கடந்த 4-ந் தேதி அன்று தொடங்கியது. வீடு, வீடாக சென்று படிவங்களை கொடுத்து, வாக்காளர்கள் விவரங்களை பூர்த்தி செய்யும் பணியை தேர்தல் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

வருகிற டிசம்பர் 4-ந் தேதி வரை இந்த பணியை மேற்கொள்வார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பத்துடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்படும் படிவங்களை ஆய்வு செய்து படிவங்கள் வழங்கிய வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

வாக்காளர் உதவி மையங்களில் அலுவலக பணி நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை வாக்காளர்கள், தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல பகுதிகளில் கணக்கீட்டு விண்ணப்ப படிவம் கொடுக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 

இந்த நிலையில், தமிழகத்தில் மாவட்ட வாரியாக எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்ட விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இதுவரை 61.34 சதவீத படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 94.41 சதவீத படிவங்களும், குறைந்தபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 22.88 சதவீத படிவங்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

விருதுநகர், திருப்பூர், சென்னை ஆகிய 3 மாவட்டங்களில் இன்னும் முழுவமையாக எஸ்.ஐ.ஆர். படிவங்கள் அச்சிடப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதுவரை 4,713 பேர் ஆன்லைன் மூலமாக தங்களது படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

படிவத்தின் மேல் பாகத்தில் 2025 வாக்காளர் அட்டை விவரங்கள் குறித்து விவரங்களை எழுத வேண்டும். இடதுபக்கத்தில் உள்ள வாக்காளர் விவரங்கள் பகுதியில் 2002 -2005 வாக்காளர் அட்டை இருந்தால் அது தொடர்பான விவரங்களை எழுத வேண்டும். உறவினர் விவரங்களை வலது பக்கத்தில் குறிப்பிட வேண்டியதில்லை. 2025 வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, 2002-ல் வாக்காளர் பெயர் இல்லை என்றால், வலது பகுதியில் உள்ள வாக்காளரின் உறவினர் என்று உள்ள பகுதியில் தந்தை உள்ளிட்ட உறவினர் விவரங்களை குறிப்பிட வேண்டும்.

2025 வாக்காளர் பெயர் மட்டும் இருந்து உறவினர்கள் யாரும் இல்லாவிட்டால், கீழ் உள்ள பகுதிகளை நிரப்ப தேவையில்லை. கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும். ஒரு படிவத்தை நிலை அலுவலர் வைத்துக்கொண்டு, மற்றொரு படிவத்தை ஒப்புகை சீட்டாக வாக்காளரிடம் கொடுத்து விடுவார். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து