முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நா.த.கட்சி சார்பில் தண்ணீர் மாநாடு: சீமான் அறிவிப்பு

திங்கட்கிழமை, 10 நவம்பர் 2025      தமிழகம்
Seaman 2024-02-17

சென்னை, நாம் தமிழர் கட்சி சார்பில் வருகிற 15-ம் தேதி தண்ணீர் மாநாடு நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு போன்றவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. 2026 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், மற்ற அரசியல் கட்சிகள் அரசியல் பரப்புரைக் கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி வருகின்றன, இந்நிலையில், சீமான் நடத்தும் மாநாடுகள் பேசும் பொருளாகி உள்ளன.

இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் 'தண்ணீர் மாநாட்டை' நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

உயர்ந்த விற்பனை பண்டமாக, நிறைய பொருளீட்டுகிற, லாபம் குவிக்கிற சந்தைப் பண்டமாக தண்ணீர் மாறி இருப்பது ஆபத்தான போக்கு. இவற்றை விளக்கும் வகையில் தண்ணீர் மாநாடு-2025-ஐ நடத்த திட்டமிட்டுள்ளோம். இன்றைய சூழலில் இது அவசியமான மாநாடாகும். 

ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி. பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி. நீரின்றி அமையாது உலகு. நினைவில் நிறுத்திப் பழகு" என்ற முழக்கத்தை முன்வைத்து தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பூதலூரில் உள்ள கரிகால் பெருவளத்தான் திடலில் வரும் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு தண்ணீர் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கட்சியின் அனைத்து கட்ட நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து