முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராயபுரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      தமிழகம்
Shekhar-Babu 2024-08-27

Source: provided

சென்னை : சென்னை துறைமுகம் மற்றும் ராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்படி, வடசென்னை பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ராயபுரம் மண்டலம், வார்டு-57க்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை, வ.உ.சி. தெருவில் ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூட கட்டுமானப் பணியினை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், வார்டு-54க்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை, சென்னை உயர்நிலைப்பள்ளியில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைந்து முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், அப்பள்ளியின் வகுப்பறை, சமையற்கூடம் ஆகிய பகுதிகளை அமைச்சருடன், மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்து, முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்து சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை தரமாகவும், சுவையாகவும் தயார் செய்து குறித்த நேரத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்கிட ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து