முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மன் கில் விலகல்..?

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      விளையாட்டு
17-Ram-90

Source: provided

மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. காயம் காரணமாக அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கவுதாத்தியில்...

தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் தொடர் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி கவுதாத்தியில் நடைபெற உள்ளது. 

கழுத்தில் காயம்...

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் காயம் காரணமாக அந்த போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 3 பந்துகள் விளையாடிய கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக வெளியேறினார். 

டிஸ்சார்ஜ் ஆனார்...

பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் சுப்மன் கில், முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சுப்மன் கில் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொல்கத்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சுப்மன் கில் வீடு திரும்பினாலும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனாலேயே 2-வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து