முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

65 ஆண்களுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விக்டோரியா பப்ளிக் ஹாலை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      தமிழகம்
Stalin 2025-11-18

Source: provided

சென்னை: 65 ஆண்களுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விக்டோரியா பப்ளிக் ஹாலை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

சென்னை மாநகரம்.. பழமையும், புதுமையும் கலந்த கட்டிடங்களை கொண்ட பாரம்பரியத்தின் அடையாளம். ஆங்காங்கே வளர்ந்து நிமிர்ந்த கட்டிடங்கள் காணப்பட்டாலும், இடையிடையே ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட கலைநய கட்டிடங்களும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. அந்த பட்டியலில், சென்னை சென்டிரல் ரெயில் நிலைய கட்டிடம் - பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்திற்கு இடையே சிகப்பு நிறத்தில் காணப்படும் விக்டோரியா பப்ளிக் ஹாலும் ஒன்று.

65 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த இந்த கட்டிடத்தை பற்றி இப்போதைய தலைமுறையினருக்கு எதுவும் தெரியாது. 1887-ம் ஆண்டு ராணி விக்டோரியாவின் பொன் விழாவை குறிக்கும் வகையில், விக்டோரியா பப்ளிக் ஹால் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை இந்தோ - சாரசானிக் முறையில் வடிவமைத்தவர் ஆர்.எப்.சிம்ஷாம். கட்டிடத்தை கட்டியவர் டி.நம்பெருமாள் செட்டியார்.

அப்போதைய மாநகராட்சியிடம் இருந்து 99 ஆண்டு குத்தகைக்கு பெறப்பட்ட 3.14 ஏக்கர் நிலத்தில் ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் செலவில் விக்டோரியா பப்ளிக் ஹால் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் நீளம் 48 மீட்டர். அகலம் 24 மீட்டர். உயரம் 19 மீட்டர். கோபுரத்தின் உயரம் 34 மீட்டர்.  இந்த கட்டிடத்திற்கு என்று பெரிய வரலாறு இருக்கின்றது. 1897-ம் ஆண்டு விக்டோரியா பப்ளிக் ஹாலில் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், கோபாலகிருஷ்ண கோகலே உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், 2009-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு முடிந்து, விக்டோரியா பப்ளிக் ஹால் மாநகராட்சியின் வசம் வந்தது. அப்போதே இந்த கட்டிடத்தை பழமை மாறாமல் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. என்றாலும், பல்வேறு காரணங்களால் பணிகளை முடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32 கோடியே 62 லட்சம் செலவில் விக்டோரியா பப்ளிக் ஹால் சீரமைக்கும் பணிகள் தொடங்கின. தற்போது இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

தரைத்தளத்தில் 600 பேரும், இடைத்தளத்தில் 600 பேரும், பால்கனியில் 200 பேரும் என மொத்தம் 1400 பேர் அமரும் வகையில் இடவசதி கொண்ட விக்டோரியா பப்ளிக் ஹாலை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். 65 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு விக்டோரியா பப்ளிக் ஹால் வர இருக்கிறது. வாடகைக்கு விடப்பட இருக்கும் இந்த கட்டிடத்தில் கலை, கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகளை நடத்திக்கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து