முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன்: 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம்

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      விளையாட்டு
18-Ram-93

Source: provided

மும்பை: ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசனில் இடம் பெறவுள்ள 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. சி.எஸ்.கே. அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் தொடர்கிறார்.

அபுதாபியில் ஏலம்...

ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இதற்கான மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக நடந்த டிரேட் முறையில் பல அணிகளில் நிறைய வீரர்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் முக்கிய மாற்றமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கும் ராஜஸ்தான் அணியில் இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கும் மாற்றப்பட்டது ஆகும். மேலும் பல அணிகள் சில வீரர்களை கழற்றி விட்டும் தக்கவைத்தும் உள்ளது. மேலும் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்களிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடருக்கான 10 அணிகளின் தலைமை பயிற்சியாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

ஸ்டீபன் பிளெமிங்... 

அதன்படி சென்னை அணியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளெமிங் பயிற்சியாளராக உள்ளார். மும்பை அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே பயிற்சியாளராக உள்ளார். பஞ்சாப் அணிக்கு ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக உள்ளார். மற்ற அணிகள் பொறுத்தவரையில் ஆர்சிபி அணிக்கு ஆண்டி பிளெவர், குஜராத் அணிக்கு ரெஹ்ரா, கொல்கத்தா அணிக்கு அபிஷேக் நாயர், டெல்லி அணிக்கு பதானி, லக்னோ அணிக்கு ஜஸ்டின் லாங்கர், ஐதராபாத் அணிக்கு டேனியல் விக்டோரி, ராஜ்ஸ்தான் அணிக்கு குமார் சங்ககாரா பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து