முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது அரசு

செவ்வாய்க்கிழமை, 2 டிசம்பர் 2025      தமிழகம்
Sengottaiyan 2025-11-18

சென்னை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். பிரிந்துள்ள நிலையில், கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசியதுடன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்ததால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் கோபிசெட்டிபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இந்த நிலையில், செங்கோட்டையன் வீட்டுக்கு தமிழக காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய ஆயுதப் படை போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து வட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பவுன்சர்கள் அவரின் வீட்டுக்கு பாதுகாப்புப் பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து