முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்: உலக சாதனை படைத்த கான்வே - லதாம் ஜோடி

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2025      விளையாட்டு
Conway---Latham-2025-12-19

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன் குவித்த தொடக்க ஜோடி என்ற உலக சாதனையை கான்வே - லதாம் இணை படைத்துள்ளது.

நிதான ஆட்டம்....

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டாம் லதாம், கான்வே களமிறங்கினர்.  இருவரும் தொடக்கம் முதலே நிதானமாகவும், அதேநேரத்தில் நேர்த்தியாகவும் ஆடி வலுவான அடித்தளம் அமைத்தனர். அபாரமாக ஆடிய கான்வே 147 பந்துகளில் தனது 6-வது சதத்தை எட்டினார். 

புதிய சாதனை....

மறுமுனையில் டாம் லதாம் 183 பந்துகளில் தனது 15-வது சதத்தை பூர்த்தி செய்தார். அணியின் ரன் எண்ணிக்கை 86.4 ஓவர்களில் 323 ரன்களாக உயர்ந்தபோது தொடக்க ஜோடி பிரிந்தது. லதாம் 137 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் மூலம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன் குவித்த தொடக்க ஜோடி என்ற உலக சாதனையை கான்வே - லதாம் இணை படைத்துள்ளது.

சாதனை பட்டியல்:

1. கான்வே & லதாம் - 323 ரன்கள்.

2. ரோகித் & மயங்க் - 317 ரன்கள்.

3. அபித் & ஷான் மசூத் - 278 ரன்கள்.

4. ஷபிக் & இமாம் உல் ஹக் - 252 ரன்கள்.

5. கிராலி & பென் டக்கெட் - 233 ரன்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து