முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2025      உலகம்
Jail 2024-05-01

பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் பெசான்கான் நகரை சேர்ந்த மருத்துவர் பிரடெரிக் பெஷியர் (53 வயது). இவர் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு நடந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

அதாவது ஆபரேஷன் செய்யும்போது மயக்கம் அடைவதற்காக நோயாளிகளுக்கு பொட்டாசியம் குளோரைடு கலந்த விஷ ஊசியை செலுத்தி உள்ளார். இதனால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவரே அதற்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி தன்னை கதாநாயகன் போல காட்டி உள்ளார். இதுபோன்று 2008 முதல் 2021-ம் ஆண்டு வரை 30 நோயாளிகளுக்கு அவர் விஷ ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் 12 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வேண்டுமென்றே விஷ ஊசி செலுத்தி 12 பேரை கொன்ற பெஷியருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து