முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2025      தமிழகம்
DCM-1-2025-12-20

சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவின் நூற்றாண்டு விழாவில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

தமிழ்நாடு துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் நேற்று (20.12.2025) நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழாவில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரினை” வெளியிட்டார். இசைமுரசு நாகூர் ஹனீபா சுயமரியாதை இயக்கத் தொண்டராக, இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராக தம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, பட்டுக்கோட்டை அழகிரி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் ஆகியோரின் அன்பைப் பெற்றவராவார்.

தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவராகவும் மக்கள் பணியாற்றி, தனது கம்பீரமான குரல் வளத்தால் அனைவரையும் கவர்ந்து புகழ்பெற்ற இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபாவின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாகக் கொண்டாட ஆணையிட்டுள்ளார். தமிழ் இசைக்கும், திரை இசைக்கும் சுமார் 75 ஆண்டுகள் தொண்டாற்றிய இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபாவின் பங்களிப்பைப் போற்றி பெருமை சேர்க்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ‘தமிழரசு’ சார்பில் “இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்” என்ற சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மலரில், தந்தை பெரியர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா குறித்து தெரிவித்த கருத்துக்கள்,”மக்கத்து மலரே, மாணிக்கச் சுடரே” என்ற தலைப்பில் நாகூர் ஹனீபாவின் வாழ்க்கைப் பயணம், நாகூர் ஹனீபாவின் பேட்டி ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும், ‘நிலைத்து நிற்கும் நிழற் படங்கள்’ என்ற தலைப்பில் இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவின் இளமைக்காலம் முதல் இறுதிக்காலம் வரை பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு தலைவர்களுடன் உள்ள அரிதான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த “இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலர்” என்ற சிறப்பு மலரினை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து