முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2026      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

நாகர்கோவில், தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சுசீந்திரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சியில் குமரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 127 கோவில்கள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. நீண்ட கோரிக்கைகளுக்கு பிறகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகமும், மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு பிறகு கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் அதிகளவில் தி.மு.க. ஆட்சியில் தான் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்பதை நாங்கள் பெருமையுடன் கூறுவோம். அதேபோல் 12 திருக்கோவில்களுக்கு சொந்தமான 20 திருத்தேர்கள் ரூ.1.85 கோடி செலவில் தேர்களுக்கான பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

6 கோவில்களுக்கு சொந்தமான 8 குளங்கள் ரூ.2.19 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் கோவில் குளம் புனரமைக்கும் பணிகள் ரூ.34 லட்சம் செலவில் நடந்தபோது எதிர்பாராதவிதாக ஏற்பட்ட சரிவினால் அந்த பணிகளுக்கு மறுஒப்பந்தம் கோர ஆணையருக்கு அனுப்பட்டுள்ளது. ஆணையர் அனுமதி பெற்று இந்த மாத இறுதிக்குள் மீண்டும் பணிகள் தொடங்கும்.

தெப்பத்திருவிழாவை முன்னிட்டு சுசீந்திரம் குளத்தை செப்பனிடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2021-ம் ஆண்டு குமரி மாவட்ட கோவில்களுக்கு மொத்தமாக ரூ.3 கோடி மானியம் அரசு வழங்கியது. கோவில்களின் விழா செலவினங்கள், கோவில் பணியாளர்கள், தினமும் ஏற்படும் உற்சவங்கள் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை அதிகம் ஆவதாவலும், ஒரு சில கோவில்களுக்கு வருமானம் இல்லாததையும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் ஆண்டுக்கு ரூ.18 கோடியாக மானியமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் 490 கோவில்களுக்கு இதுவரை ரூ.58 கோடியில் மானியம் தி.மு.க. அரசு வழங்கி உள்ளது. மேலும் 1000 ஆண்டு பழமையான கோவில்களுக்கு தொல்லியல் துறை மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு குடமுழுக்கு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து