எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் பேசிய முதல்வர் உலகளாவிய திறன் மையத்தின் தலைநகராக தமிழ்நாடு மாறிவருகிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மாநாடு நல்ல வளர்ச்சி....
சென்னை நம்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல நிறுவனங்கள் சார்பில் ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; நாம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த மாநாட்டை தொடங்கினோம். தற்போது இந்த மாநாடு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது பெருமையாக உள்ளது.
முக்கியமான தருணம்...
தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்லும் தொலைநோக்கு பார்வை கொண்டவர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி பயணத்தில் இது முக்கியமான தருணம். தமிழ்நாட்டின் தொழில்நுட்ப பயணத்திற்கு இன்று (நேற்று) நடைபெறும் தகவல் தொழில்நுட்ப மாநாடு சிறப்பு சேர்க்கும். நவீனத்தை நோக்கிய பாய்ச்சலுடன் தமிழக அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறது.
முக்கிய அங்கமாக....
மற்ற மாநிலங்களை விட தொழில்நுட்பத்துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தொழில்நுட்பத்துறையில் நாம் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் கலைஞர். தமிழ்நாட்டின் ஐ.டி.பாலிசியை கொண்டுவந்தவர் கலைஞர். தமிழ்நாட்டின் மைய அச்சு, தகவல் தொழில்நுட்பம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய அங்கமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத்திற்கான கருவியாக பார்க்க வேண்டும்.
சமமாக சென்றடைய....
எல்லா துறைகளும் ஒரே இலக்கில் செல்கின்றன. அறிவியல் அணுகுமுறைகளை தமிழ்நாடு கையாளுகிறது. தொழில்நுட்பம் எல்லோரையும் சமமாக சென்றடைய வேண்டும். புதுயுகத் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உலகளாவிய திறன் மையத்தின் தலைநகராக தமிழ்நாடு மாறிவருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடப்பதாக மத்திய அரசின் புள்ளி விபரம் கூறுகிறது. திராவிட மாடல் ஆட்சி என்றால் என்னவென்று மத்திய அரசு கேட்கும் கேள்விக்கு அவர்கள் வெளியிடும் வளர்ச்சி தரவுகளே பதில். இவ்வாறு அவர் பேசினார்.
உலகளாவிய திறன் மையத்தின் தலைநகராக தமிழ்நாடு மாறிவருகிறது. 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடப்பதாக மத்திய அரசின் புள்ளி விபரம் கூறுகிறது. திராவிட மாடல் ஆட்சி என்றால் என்னவென்று மத்திய அரசு கேட்கும் கேள்விக்கு அவர்கள் வெளியிடும் வளர்ச்சி தரவுகளே பதில்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


