முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியா? ரிலையன்ஸ் விளக்கம்

வியாழக்கிழமை, 8 ஜனவரி 2026      இந்தியா
Oil

புதுடெல்லி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கிடையாது என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் நயாரா என்ற பெயரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. அதிகபட்சமாக ரஷ்யாவின் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லூக்காயில் ஆகியவற்றிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது.

கடந்த ஆண்டில் ரஷ்யா கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்தது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. இருப்பினும் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து ரஷ்ய நிறுவனங்களின் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதாக வெளிநாடுகளில் செய்திகள் வெளியாகி வந்தன.

இதனை ரிலையன்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 3 மாதங்களாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது கிடையாது. இந்த மாதத்திலும் (ஜனவரி) ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் எண்ணம் இல்லை” என கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து