எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார். தொகுதிப் பங்கீடு, பிரதமரின் தமிழக வருகை குறித்து இருவரும் விரிவான ஆலோசனை நடத்தியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. - பாமக கூட்டணி இறுதியானதை தொடர்ந்து, டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புதன்கிழமை இரவு நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்தும், இம்மாத இறுதியில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தருவதற்குள் கூட்டணியை இறுதி செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, டெல்லிக்கு நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்ட அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தார். இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு நேற்று காலை நேரில் சென்ற நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பா.ஜ.க. தரப்பில் 56 தொகுதிகளும், அமைச்சரவையில் பங்கீடும் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 30 தொகுதிகள் வரை ஒதுக்க இ.பி.எஸ். ஒப்புக் கொண்டதாகவும், அ.தி.மு.க. 170 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பது விரைவில் அறிவிக்கப்படும். பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து ஆலோசிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
மேலும், அமைச்சரவையில் பங்கு கேட்கப்பட்டதா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்கவில்லை. முன்னதாக, பா.ம.க.வுக்கு 17 முதல் 20 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் வழங்க அ.தி.மு.க. ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


